Connect with us

அதிகனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் – அமைச்சர் உதயநிதி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..

Featured

அதிகனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் – அமைச்சர் உதயநிதி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..

அதிகனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு – நிவாரணம் – சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்மை தகவலை வெளியிட்டுள்ள அமைச்சர் உதயநிதி கூறியதாவது :

வரலாறு கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து தற்போது உள்ள சூழலில் மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து, அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது .

இக்கூட்டத்தின் போது, வெள்ளப்பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பை விரைந்து முடிக்கவும், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பயிர்ச்சேதம், முழுமையாகவும் பகுதியாகவும் இடிந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகள் ஆகியவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்குவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது .

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளின் போது பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை தொகுத்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரூர் மரணங்கள்: "நாங்களும் ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம்" – எஸ்.ஏ. சந்திரசேகர்

More in Featured

To Top