Connect with us

வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும் – பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

Featured

வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும் – பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி

பாஜக சார்பில் சேலத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

கோவையில் நேற்று பாஜகவின் ரோடு ஷோ நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்று சேலத்தில் நடைபெறும் பாஜகவின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இப்பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது :

தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் எனக்கும் கிடைத்து வரும் மக்கள் ஆதரவை நாடே பார்க்கிறது. பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துபோய்விட்டது.

தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் . ஏப்ரல் 19ஆம் தேதி விழும் ஒவ்வொரு ஓட்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

தமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழித்துக்காட்டும் நேரம் வந்துவிட்டது என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தற்போது தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது X தள பக்கத்தில் அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது :

வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும்.

மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி அனந்தன் மகள் தமிழிசை ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று மோடி பேசுவது அவரின் அதீத நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோயம்புத்தூர்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்! — ஷூட்டிங் தளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட சத்யராஜ்!

More in Featured

To Top