Connect with us

பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் – எதற்கு தெரியுமா..?

Featured

பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் – எதற்கு தெரியுமா..?

உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் மார்க் ஜக்கர்பர்க் அனைத்து பெற்றோர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்றைய 2கே காலகட்டத்தில் இந்த 2கே கிட்ஸ் செய்யும் அலப்பறைகள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை . ஒரு பக்கம் டெக்னாலஜி நம்மை அசுர வேகத்தில் வளர்க்கிறது . அதே டெக்னாலஜி நம்மை அடிமை படுத்தி சீரழிவும் செய்கிறது .

அதிலும் குறிப்பாக இன்றைய கலியுககாலத்தில் நேற்று பார்த்தால் இன்று காதல் நாளை திருமணம் நாளை மறுநாள் விவாகரத்து என்றாகி விட்டது, சிலர் அதுக்கும் மேலே சென்று தங்கள் சொந்த உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்ய தொடங்கி விட்டார்கள்.

இவை அனைத்தையும் சமூக ஊடகங்கள் என்று சொல்லப்படும் facebook இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் நாம் தினம் தினம் பார்க்கிறோம்.

இந்நிலையில் மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் அணைத்து பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்

தற்போதைய சமூகத்தினர் சமூக வலைதளங்களில் பல மணி நேரம் செலவழிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகளும் இதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் போதுமான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாததால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் சைபர் புல்லியிங் எனப்படும் இணைய மிரட்டல்களுக்கும், பாலியல் தொல்லைகளுக்கும், தற்கொலைகளுக்கும் கூட ஆளாகின்றனர்.

சமூக வலைதளங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் அவர்களும் கலந்துகொண்டார் .

அப்போது தங்கள் குழந்தைகள் அடந்த துன்பங்களை பெற்றோர்கள் கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் இது குறித்து மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறுகையில், அங்கிருந்த குடும்பங்களிடம், ‘நீங்கள் பட்ட அனைத்து கஷ்டங்களுக்கு நான் வருந்துகிறேன். எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள். இது யாருக்கும் நடக்கக்கூடாது’ என கூறினார்.

இணைய வழி குற்றவாளிகளிடமிருந்து குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் , பெற்றோருக்கும் பாதுகாப்பை அளிக்க நாங்கள் கடுமையாக உழைத்துவருகிறோம்’ என மார்க் தெரிவித்தார்.

.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தில் இன்று அசத்தப்போவது யார்..? SRH - RR இன்று பலப்பரீட்சை..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top