Connect with us

வாழை படத்தை இப்படி தான் மாரி செல்வராஜ் ரிலீஸ் செய்ய இருக்கின்றார்,HOT தகவல் இதோ..

Cinema News

வாழை படத்தை இப்படி தான் மாரி செல்வராஜ் ரிலீஸ் செய்ய இருக்கின்றார்,HOT தகவல் இதோ..

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஜூன் மாதம் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’ மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் பெற்றது..உதயநிதி ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் வசூலில் மாஸ் காட்டியது..அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து பல பாராட்டுகளை குவித்தது.மேலும் இந்த படத்தின் மூலம் வடிவேலு நடிப்பின் மற்றொரு வடிவத்தை ரசிகர்கள் பார்த்தனர்.

சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி நிறைய பேசப்பட்டு இருந்தது இதனை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய அடுத்த படைப்பை வெளியிட தயாராகியுள்ளார்.

‘வாழை’ தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்கள்,மற்றும் தொழிலாளர்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது…இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்..

கலையரசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில்,நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் தற்போது ஒரு சூப்பர் தகவல் வந்து இருக்கின்றது அதன்படி இப்படம் பற்றி விரைவில் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது..ஹாட்ஸ்டார் தான் இதனை ரிலீஸ் செய்ய உள்ளனராம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top