Connect with us

அதிமுகவுடன் கூட்டு சேரும் மன்சூர் அலிகான் – தொடரும் கூட்டணி பேச்சுவார்த்தை..!!

Featured

அதிமுகவுடன் கூட்டு சேரும் மன்சூர் அலிகான் – தொடரும் கூட்டணி பேச்சுவார்த்தை..!!

மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் இருக்கும் காட்சிகள் அனைத்தும் கூட்டணியில் ஒன்றிணைந்து வரும் நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .

மக்களவைத் தேர்தலுக்குக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அணைத்து கட்சிகளும் தற்போது கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது .

தொகுதி பங்கீடு,வேட்பாளர் தேர்வு ,தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக இயங்கி வரும் நிலையில் அரசியல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதில் அதிமுக திமுக பாஜக என 3 காட்சிகள் தங்களுக்கான கூட்டணிகளை வலிமை படுத்த பிற கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது .

அந்தவகைகியில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுகல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை மன்சூர் அலிகான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை செய்வேன் என மன்சூர் அலிகான் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top