Connect with us

கட்சி தொடங்கியவரையே கட்சியில் இருந்து தூக்கிய அதிர்ச்சி சம்பவம் – மன்சூர் அலிகானுக்கு ஏற்பட்ட சோக நிலை..!!

Cinema News

கட்சி தொடங்கியவரையே கட்சியில் இருந்து தூக்கிய அதிர்ச்சி சம்பவம் – மன்சூர் அலிகானுக்கு ஏற்பட்ட சோக நிலை..!!

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

நடிகர் மன்சூர் அலிகான் நீண்ட நெடு நாட்களாக திரை துறையில் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு பிரபல அரசியல் தலைவராக இருந்து வருகிறார் .

இந்நிலையில் தற்போது ஏற்கனவே இருந்த தனது கட்சியை இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற பெயரில் புதுப்பித்து அதன் தலைவராக செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றுள்ளது .

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு அளிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் தலைவராக இருந்த மன்சூர் அலிகான் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர். அனால் இதற்கான கரணம் குறித்து அக்கட்சி எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை.

தமிழகத்தில் ஏற்கனவே அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதும் ஒரு கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு தாவுவதும் தற்போது அதிகளவில் நடந்து வரும் நிலையில் மன்சூர் அலிகான் தனது சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது பெரும் பேச்சு பொருளாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரஜினி 173 ஏப்ரலில் தொடக்கம் – சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் மெகா படம்”

More in Cinema News

To Top