Connect with us

அட்ரா சக்க : 100 கோடி வசூலை கடந்தது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம்..!!

Cinema News

அட்ரா சக்க : 100 கோடி வசூலை கடந்தது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம்..!!

ரசிகர்கள் கொண்டாடும் படமாக உருமாறி உள்ள ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள மலையாளப் படமே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

கேரளா மாநிலத்தில் மஞ்சும்மல் என்ற பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்ற நண்பர்களில் ஒருவர், குணா குகையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து சிக்கிக் கொள்கிறார். அவரை அவரது நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்பதே இப்படத்தின் கதை.

சிதம்பரம் இயக்கியுள்ள இப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் இந்தியா முக்குவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி இப்படத்தை திரை நட்சத்திரங்களும் கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் ஆதரவைப் பெற்று சூப்பட் ஹிட் அடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் உலகம் முழுவதும், 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் சுமார் 56 கோடி வசூலித்துள்ள இத்திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் 20 கோடி வசூலைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பை மண்ணில் பேட்டிங்கில் மிரட்டுமா கொல்கத்தா..? டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top