Connect with us

“மம்மூட்டியின் ‘Kannur Squad’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவுப்பு வெளியானது!”

Cinema News

“மம்மூட்டியின் ‘Kannur Squad’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவுப்பு வெளியானது!”

ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிஷோர், ரோனி டேவிட் ராஜ், ஷபரீஷ் வர்மா, அஜீஸ், ஷைன் டாம் சாக்கோ, சன்னி வெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘கும்பளாங்கி நைட்ஸ்’ புகழ் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

மம்மூட்டி தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

இந்த ஆண்டில் வெளியான ‘2018’ படத்துக்குப் பிறகு அதிக வசூலை குவித்த மலையாள படம் என்ற பெருமையை ‘கண்ணூர் ஸ்குவாட்’ பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் நவம்பர் 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்மூட்டி நடிப்பில் அடுத்ததாக ‘காதல் தி கோர்’ திரைப்படம் நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top