Connect with us

நடிகை ராஷ்மிகாவை மேடையில் புகழ்ந்த பிரபலம்..வெட்கத்தில் தவித்த ராஷ்மிகா!

Cinema News

நடிகை ராஷ்மிகாவை மேடையில் புகழ்ந்த பிரபலம்..வெட்கத்தில் தவித்த ராஷ்மிகா!

தென்னிந்தியாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்க தொடங்கி விட்டார் நடிகை ராஷ்மிகா..இவருக்கு அங்கும் எக்கச்சக்கமாக ரசிகர்கள் வந்துவிட்டனர்…இவர் நடிப்பில் அனிமல் படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது…நிறைய ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இவர் பிஸியாக இருக்கின்றார்…

இப்படத்தை சந்தீப் வங்கா இயக்க ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்..வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட் படம் என்கின்றனர்…இந்த படம் மிகவும் அதிகம் பேசப்படும் என்றும் சொல்லி வருகின்றனர்,இப்படம் அடுத்த அர்ஜுன் ரெட்டி என்றும் சொல்கின்றனர்…படம் தற்போது ரிலீஸ் தேதியை நெருங்கியுள்ள நிலையில் படக்குழு வேகமாக படத்தை புரொமோஷன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (27.11.23) இப்படத்தின் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடக்க அதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கலந்துகொண்டார்…அவரை பார்க்கவே அவ்வளவு கூட்டம் வந்தது..மிகவும் பிரம்மாண்டமாக இந்த விழா நடந்தது…

அப்போது அந்த விழாவில் மகேஷ் பாபு பேசும்போது,அவர் எல்லோரையும் புகழ்ந்து ராஷ்மிகாவை மறந்து சென்றுவிட்டார்…ராஷ்மிகாவிற்கு ஒரு மாதிரி சங்கடமாக உடனே சுதாரித்து மகேஷ் பாபு ராஷ்மிகாவிடம் மன்னிப்பு கேட்டதோடு உங்கள் வளர்ச்சி என்னை பிரமிக்க வைக்கின்றது என பாராட்டினார்..தனியாக அவரை நிறைய புகழ்ந்து இருக்கின்றார் அதனால் அவர் வெட்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top