Connect with us

சீனாவில் வசூல் வேட்டை நடத்தும் மகாராஜா: இதுவரை எவ்வளவு தெரியுமா?

Featured

சீனாவில் வசூல் வேட்டை நடத்தும் மகாராஜா: இதுவரை எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இன்று திகழ்கிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதோடு, எதிர்பார்க்கப்படும் விடுதலை 2 திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும், விஜய் சேதுபதி தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

2024 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் மாபெரும் வெற்றியடைந்த ஒரு படம் மகாராஜா. இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இதில் சாச்சனா, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி என பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

வசூல் வேட்டை
மகாராஜா படம் உலகளவில் ரூ. 110 கோடி வசூல் செய்துள்ள நிலையில், சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் மட்டும் ரூ. 76 கோடி வசூல் செய்துள்ள நிலையில், மகாராஜா திரைப்படம் தற்போது மொத்தமாக ரூ. 186 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  D55 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா – ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு 🎬🔥

More in Featured

To Top