Connect with us

வசூல் சாதனை படைத்த மகாராஜா படத்தின் 2-ம் பாகம் Update..

Featured

வசூல் சாதனை படைத்த மகாராஜா படத்தின் 2-ம் பாகம் Update..

2024ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், அடுத்தென்ன என்று கேட்க வைத்த கதையுடன், இறுதியில் ட்விஸ்ட் வைக்க ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா,
பிக் பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக கலந்துகொண்டார். அதேபோல் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, முனீஸ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து,
இப்போது மகாராஜா 2 பற்றிய ஒரு அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், மகாராஜா 2 கதையை நடிகர் விஜய் சேதுபதியிடம் சொல்லிவிட்டார்.

தற்போது, இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களை முடித்த பின்,
மகாராஜா 2யில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top