Connect with us

“மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு: DNA சோதனை முடிவு… நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு”

Cinema News

“மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு: DNA சோதனை முடிவு… நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு”

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், உணவு தொழிலதிபராகவே மக்களிடையே அதிகம் அறிமுகமானவர் Madhampatty Rangaraj. தனது catering தொழிலை இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தி வருகிறார். அதே நேரத்தில், Cooku with Comali நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், ஆடை வடிவமைப்பாளர் Joy Crizilda, தன்னை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொடுத்து பின்னர் ஏமாற்றியதாக ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக குழந்தைக்கு மரபணு (DNA) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை முடிவின் அடிப்படையில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தொழிலில் வெற்றி பெற்ற ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த விவகாரம், நீதிமன்ற தீர்ப்பின் மூலம் புதிய திருப்பத்தை கண்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top