Connect with us

மாமன் படம் – திரைவிமர்சனம்..

Featured

மாமன் படம் – திரைவிமர்சனம்..

இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள மாமன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கும் இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

படத்தின் கதை என்ன : சூரியின் அக்கா ஸ்வாசிகா 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம் ஆகி, ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவாகிறாள்.
அந்தக் குழந்தையை வளர்ப்பதில், சூரி தான் தந்தை மாதிரி எல்லா பொறுப்பையும் எடுத்து செய்கிறார்.

அந்த பாசத்தால் அந்தக் குழந்தையும் மாமாவை விட்டே பிரியமாட்டேன் என்கிற அளவுக்கு அவரை நேசிக்கிறான். இந்த நிலைமையில் சூரிக்கும், ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு குழந்தை இன்னும் மாமாவை விட்டுப் பிரியாமல் இருந்தால் என்ன ஆகும்?
அதுதான் படத்தின் மையக் கதை.

படத்தின் ஹைலைட்ஸ் என்ன : ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகாவின் எமோஷனல் பெர்ஃபார்மன்ஸ். சிறுவனின் சிறந்த நடிப்பு. ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் மற்றும் பாபா பாஸ்கரின் கதாபாத்திரங்கள்.

தொழில்நுட்ப டீம் : ஒளிப்பதிவும், பின்னணி இசையும், பாடல்களும், எடிட்டிங்கும் படத்தோடு நன்றாக ஒன்றிணைந்திருக்கின்றன.

மைனஸ் பாயிண்ட் : படம் முழுக்க எமோஷனல் சிக்வன்ஸ்கள் அதிகமாக இருப்பதால், சில இடங்களில் மெதுவாக உணரலாம். 2k கிட்ஸ்‌க்கு படத்தின் எமோஷன்கள் எவ்வளவு கனெக்ட் ஆகும் என்பதில் சந்தேகம். மொத்தத்தில், மாமன் ஒரு உணர்ச்சிமிகு குடும்ப ரைடு. சூரிக்கு இது ஒரு பெரிய முற்றுப்புள்ளி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top