Connect with us

லோகேஷ் கனகராஜின் அடுத்த அதிரடி திட்டம், பிரபாஸ்–பவன் கல்யாண் கூட்டணி!

Cinema News

லோகேஷ் கனகராஜின் அடுத்த அதிரடி திட்டம், பிரபாஸ்–பவன் கல்யாண் கூட்டணி!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்.

இப்போது, அவர் இயக்குநராக மட்டும் இல்லாமல், கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகி வருகிறது.

இதற்காக அவர் கடுமையான சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், புதிய கெட்அப்பில் ரசிகர்கள் முன் தோன்றப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் முதல் முயற்சிக்காக லோகேஷ் கனகராஜ் ரூ. 35 கோடி சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகர்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார்.

பல வெற்றி படங்களை இயக்கிய பிறகு, அவர் ஹீரோவாகவும் வெற்றி பெறுவாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதில் பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

இந்த மிகப்பெரிய கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Tamil Nadu-ல Release இல்லையே…? 😳 | Akhanda 2 Trolls Creating Controversy 🔥

More in Cinema News

To Top