Connect with us

“லோகேஷ் கனகராஜ் வழங்கும், விஜயகுமார் நடிக்கும் ‘Fight Club’ படத்தின் Teaser வெளியாகியுள்ளது!”

Cinema News

“லோகேஷ் கனகராஜ் வழங்கும், விஜயகுமார் நடிக்கும் ‘Fight Club’ படத்தின் Teaser வெளியாகியுள்ளது!”

மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான அவர் ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் உச்சம் தொட்டு விக்ரம் என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்தார். அதனை தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் LEO.

இந்தப்படம் வசூலில் பெரிய உயரத்தை அடைந்த போதும், கடுமையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்கப்போகும் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் லோகேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், ‘G squad’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன் என அறிவித்திருந்தார். முதற்கட்டமாக என்னுடைய நண்பர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோரின் ஐடியாக்களை படமாக எடுக்க இருக்கிறேன். இதைத்தொடர்ந்து நவம்பர் 29 வெளியான பதிவில் இயக்குனரும் நடிகருமான விஜய்யின் அடுத்த படத்தின் பிரஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது.

படத்தின் பெயர் ‘Fight Club‘ என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பிரஸ் மீட் ஒன்று நடத்தப்பட்டது. தற்போது படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. படம் டிசம்பர் 15 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளையராஜா - அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு - காரணம் என்ன தெரியுமா..?

More in Cinema News

To Top