Connect with us

2023ம் ஆண்டுக்கான FIFA-வின் சிறந்த வீரராக லயோனல் மெஸ்ஸி தேர்வு! Viral!

Sports

2023ம் ஆண்டுக்கான FIFA-வின் சிறந்த வீரராக லயோனல் மெஸ்ஸி தேர்வு! Viral!

உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3-வது முறையாக இந்த விருதை மெஸ்ஸி பெறுகிறார்.

இந்த விருதுக்காக நடந்த வாக்கெடுப்பில் மெஸ்ஸி அதிக புள்ளிகள் பெற்று விருதைத் தட்டிச் சென்றார். அவருக்கு அடுத்தபடியாக மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி வீரர் எர்லிங் ஹாலந்து சற்றே குறைந்த அளவில் புள்ளிகள் பெற்றார்.

ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை அய்டானா பான்மாட்டி, 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனை விருதைத் தட்டிச் சென்றார். ஸ்பெயினுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றினார் அய்டானா.

மேலும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் பார்சிலோனாவுக்கு தலைமையை ஏற்றிருந்தார் அய்டானா. கடந்த ஓராண்டில் அய்டானா பாலோன் டி ஆர், கோல்டன் பால் விருது, யுஇஎஃப்ஏ விருது ஆகியவற்றையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புரி ஜகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி | ‘Slumdog – 33 Temple Road’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு

More in Sports

To Top