Connect with us

பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Featured

பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்க, அதில் பிரதமர் தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது நியமாக இருக்கிறதா என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தேர்தல் காலங்களில் மட்டும், நம்மை எட்டிப் பார்க்கும் பிரதமரின் சுற்றுப்பயணங்கள் – வெற்றுப்பயணங்களே! பேரிடர் காலங்களில் கூட தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட பிரதமர் தற்போது வெறும் கையில் முழம் போடலாமா?

நிதிதான் மாநிலங்களின் ஆக்சிஜன். அதையே நிறுத்திவிட்டுத் தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?

ஜல்ஜீவன், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்க, அதில் பிரதமர் தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது நியாயமா?

பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது தமிழக மக்கள் இதுபோன்ற மாயைக்கு மயங்க மாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “25 Years Ago! 😲 Aishwarya Rai-வுடன் நடிக்கும் வாய்ப்பு எப்படி Miss ஆனது? Parthiban Reveals!”

More in Featured

To Top