Connect with us

நடிகர் சங்க கட்டிடத்துக்கு நிதி உதவி வழங்கிய விஜய் – குவியும் பாராட்டுக்கள்

Cinema News

நடிகர் சங்க கட்டிடத்துக்கு நிதி உதவி வழங்கிய விஜய் – குவியும் பாராட்டுக்கள்

நடிகர் சங்க கட்டிட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதன் பணிகளுக்காக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மிக பெரிய தொகையை வழங்கி உள்ளதகா தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் திரை நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளை எடுக்கப்பட்டு வரும் நிலையில் நிதி நெருக்கடி காரணமாக இந்த கட்டிடத்தின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் நடிகர் சங்கத்திலும் பல இடையூறுகள் வர அது நீதிமன்றம் வரை சென்றது. இதையடுத்து ஒருவழியாக அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு தற்போது மீண்டும் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கதின் கட்டுமான பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவி செய்தார் .

அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்த நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகிய நடிகர் சங்க நிர்வாகிகள் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை பெற்றுக் கொண்டனர் .

இதையடுத்து உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி செய்தார் .

இந்நிலையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மிக பெரிய தொகையை வழங்கி உள்ளதகா தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக சுமார் 1 கோடி ருபாய் நிதியை விஜய் வழங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சங்க கட்டடம் தற்போது தீவிர கட்டுமானப்பணியில் இருக்கும் நிலையில் உச்ச நட்சத்திரங்கள் பலரும் நிதி உதவி செய்தால் இந்த கட்டடத்தை இன்னும் விரைவாக செய்து முடிக்கலாம் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய் இந்த தொகையை வழங்கி உள்ளார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குஜராத்தை அடித்து துவைத்த ரிஷப் பண்ட் - டெல்லி அணி 224 ரன்கள் குவிப்பு..!!!

More in Cinema News

To Top