Connect with us

“சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் அயலான் படத்தின் Release எப்போது? SK 21 பட Title என்ன?!”

Cinema News

“சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் அயலான் படத்தின் Release எப்போது? SK 21 பட Title என்ன?!”

சிவகார்த்திகேயன் தற்போது SK 21 படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். SK 21 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது பண்டிச்சேரியில் நடைபெற்று வரும் SK 21 படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பங்கேற்றுள்ளார். விரைவில் சென்னையிலும் SK 21 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். இருப்பினும் இதுவரை சிவகார்த்திகேயனின் SK 21 Look வெளியாகவில்லை.

அதேபோல், இந்தப் படத்தின் டைட்டில் குறித்தும் படக்குழு அப்டேட் கொடுக்கவில்லை. இந்நிலையில், SK 21 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த இரண்டுமே அயலான் படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், வரும் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு AR ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்கிய அயலான், பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அயலான் படத்துடன் SK 21 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அயலான் திரைப்படம் அதிக நாடுகளில், அதிக ஸ்க்ரீன்களில் வெளியாகவுள்ளது.

இதன் காரணமாக SK 21 அப்டேட்டையும் அயலானுடன் வெளியிட்டால் செம்மையாக ரீச் ஆகும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. அதன்படி, இந்த பொங்கல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தான் செம்ம கொண்டாட்டமாக இருக்கப் போகிறது. இதனிடையே ரஜினியின் லால் சலாம், தனுஷின் கேப்டன் மில்லர் படங்களும் பொங்கலுக்கு வெளியாகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு..!!

More in Cinema News

To Top