Connect with us

“KH 233 படத்திற்கு அடுத்தது கார்த்தியின் படம்தான்! பக்கா பிளானுடன் இயக்குனர் H. வினோத்!”

Cinema News

“KH 233 படத்திற்கு அடுத்தது கார்த்தியின் படம்தான்! பக்கா பிளானுடன் இயக்குனர் H. வினோத்!”

அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் சிறப்பான இயக்குநர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார் கார்த்தி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஜானர்களில் நடித்து கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 படம் மற்றும் ஜப்பான் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் கார்த்தியின் கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்தது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. உண்மைக்கதையை மையமாக கொண்டு கடந்த 2017ம் ஆண்டில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் இயக்குநர் H. வினோத்திற்கு மட்டுமில்லாமல் கார்த்தியின் கேரியரிலும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இந்தப் படத்தை தொடர்ந்தே அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களை இயக்கும் வாய்ப்பை ஹெச் வினோத் பெற்றார். அடுத்ததாக கமல்ஹாசனின் KH233 படத்தையும் ஹெச் வினோத் இயக்கவுள்ளார். கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஹெச் வினோத் கவனம் செலுத்தவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல் படத்தை இயக்கி முடித்தவுடன் இந்தப் படத்தின் வேலைகளில் அவர் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான ஒன்லைன் கதையை கார்த்தியிடம் சொல்லி அவர் ஓகே வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று மிகச்சிறந்த காவல் அதிகாரியின் செயல்பாட்டை முன் வைத்தது.

இந்நிலையில் அடுத்ததாக இதேபோன்ற அழுத்தமான கதைக்களத்தில் புதிய கதையை H. வினோத் உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டில் இந்தப் படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டு சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீரன் அதிகாரம் ஒன்று படம் வெளியாகி தற்போது 6 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் படம் 6 ஆண்டுகளுக்கு முன்பே 72 கோடி ரூபாய் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top