Connect with us

“வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் GOAT படத்தின் Release எப்போது தெரியுமா?!

Cinema News

“வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் GOAT படத்தின் Release எப்போது தெரியுமா?!

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் தாறுமாறாக இருந்தாலும், அதனை ஜூம் செய்து பார்த்தால் யங் விஜய் அனிமேஷன் பொம்மை போலவே இருப்பார். அதற்கு காரணம் அதற்கான முறையான டீஏஜிங் வேலைகள் இன்னமும் நடைபெறவில்லை என்கின்றனர். ஆனால், அதற்கான நேரத்தை ஒதுக்கி ஹாலிவுட் நிறுவனத்துடன் லாஸ் வீகாஸில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எவ்வளவு சீக்கிரம் ஷூட்டிங்கை முடித்து விட்டு வெங்கட் பிரபு கொடுக்கிறாரோ அதன் பிறகு தாறுமாறாக டீஏஜிங் பணிகள் நடைபெறும் எனக் கூறுகின்றனர்.

லியோ படத்தை ஆயுத பூஜை ரிலீஸாக வெளியிட்ட தளபதி விஜய் இந்த முறையாவது தீபாவளிக்கு படத்தை வெளியிடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மார்ச் மாதமே ஷூட்டிங் முடியப் போகிறது என்கிற தகவலால் கங்குவா படத்துக்கு போட்டியாக ஏப்ரல் மாதமே வெளியாகுமா? என எதிர்பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், இந்த படம் அதிகமாக போஸ்ட் புரொடக்‌ஷனில் தான் மெருகேற்றப்பட வேண்டி உள்ள நிலையில், பக்ரீத் பிரியாணியாக GOAT வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை ஜூன் 16 அல்லது 17ல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த வாரம் ஜூன் 13ம் தேதி வியாழக்கிழமையே தி கோட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏப்ரல் முதல் ஜூன் வரை தொடர்ந்து இந்த ஆண்டு அடுத்தடுத்து பெரிய படங்கள் வரிசை கட்டி வெளியாக காத்திருக்கின்றன.

தொடர்ந்து 5 நாட்கள் லியோ படத்தை போலவே எந்தவொரு போட்டியும் இல்லாமல் தி கோட் படத்தை வெளியிடவும் பக்காவாக பிளான் செய்து ஏஜிஎஸ் நிறுவனம் பக்ரீத் பண்டிகையை டார்கெட் செய்திருப்பதாக கூறுகின்றனர். சம்மர் விடுமுறைக்கு இந்தியன் 2, கங்குவா, வேட்டையன் மற்றும் விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் போட்டிப் போட்டு வெளியாகி முடித்து விட்டால் விஜய் படம் வசூலில் பெரிய வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!!

More in Cinema News

To Top