Connect with us

“Captain Miller படத்துக்கு பிறகு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கும் படம் என்ன தெரியுமா?!”

Cinema News

“Captain Miller படத்துக்கு பிறகு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கும் படம் என்ன தெரியுமா?!”

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்தடுத்த புரொஜக்ட்கள் குறித்த தகவல்களை அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

’கேப்டன் மில்லர்’ ரிலீசுக்கு பிறகு அவர் ஒரு திரைப்படத்தை தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்க இருப்பதாகவும் 15 நாட்களில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் உடன் மீண்டும் இணைந்து ஒரே மிகப்பெரிய வரலாற்று திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ’ஜகமே தந்திரம்’ படத்தை தயாரித்த ஒய்நாட் ஸ்டுடியோ நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்து ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். ’கேப்டன் மில்லர்’ ரிலீஸ் ஆகும் முன்பே அவர் மூன்று படங்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளார் என்பதும் அடுத்தடுத்து அந்த படங்கள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top