Connect with us

தளபதி விஜய்யின் ‘GOAT’ பட முதல் Single பாடல் எப்போது ரிலீஸ்?! Viral!

Cinema News

தளபதி விஜய்யின் ‘GOAT’ பட முதல் Single பாடல் எப்போது ரிலீஸ்?! Viral!

தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் அதில் ஒரு பாடல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் படித்துவிட்டு அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் புரோமோஷன் பணிகள் நடைபெறும் என்றும் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், AGS நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் - விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

More in Cinema News

To Top