Connect with us

“கமல்ஹாசனின் ‘Indian 2’ மற்றும் ‘Indian 3’ படங்களின் ரிலீஸ் தேதிகள் இதுவா?!”

Cinema News

“கமல்ஹாசனின் ‘Indian 2’ மற்றும் ‘Indian 3’ படங்களின் ரிலீஸ் தேதிகள் இதுவா?!”

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன்’ என்ற திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் ’இந்தியன் 3’ படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து வருவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ ஆகிய இரண்டு படங்களுமே இந்த ஆண்டுக்குள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படங்களின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதன் டப்பிங், கிராபிக்ஸ், எடிட்டிங் பணிகள் பார்க்க நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் ’இந்தியன் 3’ படத்தின் படப்பிடிப்பும் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுவதால் இந்த திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது வெளியிட திட்டமிடப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ’கேம் சேஞ்சர்’ படமும் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டில் ஷங்கரின் மூன்று படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதால் சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Cinema News

To Top