Connect with us

“மீண்டும் மீண்டும் ரீமேக்கா..! வெங்கட் பிரபுவின் தளபதி 68 படம் எந்த Hollywood படத்தின் Remake தெரியுமா?!”

Cinema News

“மீண்டும் மீண்டும் ரீமேக்கா..! வெங்கட் பிரபுவின் தளபதி 68 படம் எந்த Hollywood படத்தின் Remake தெரியுமா?!”

விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 31ம் தேதி மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டர், படத்தின் டைட்டில் ஆகியவையும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. AGS நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி 68 படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதேபோல் இது சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின்னர் வெளியான தகவல்களின் படி தளபதி 68 கமர்சியல் மூவி தான் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது மீண்டும் தளபதி 68 கதை குறித்து சில அப்டேட்கள் கிடைத்துள்ளன. அதன்படி விஜய்யின் தளபதி 68 சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் விஜய் இரண்டு அல்லது மூன்று கேரக்டர்களில் நடிக்கலாம் எனவும் தெரிகிறது.

அதாவது தளபதி 68 படத்தின் ஒன்லைன் ஸ்டோரி, ஹாலிவுட்டில் வெற்றிப் பெற்ற Gemini Man படத்தின் தழுவல் எனக் கூறப்படுகிறது. வில் ஸ்மித் நடித்திருந்த Gemini Man, சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஆக்‌ஷன் மூவியாக உருவாகி இருந்தது. அந்த கதையை அப்படியே கொஞ்சம் பட்டி, டிங்கரிங் செய்து, கோலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றபடி ரீமேக் செய்யப்படுகிறதாம்.

ஆனால், விஜய்யின் ஆக்‌ஷன் சீன்ஸ் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோவும் ஹாலிவுட்டில் வெளியான A History of Violence படத்தை தழுவியே எடுக்கப்பட்டிருந்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வெற்றிநடை போடும் கவினின் ஸ்டார் - முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top