Connect with us

“சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?! அதே நாளில் இந்த நடிகரின் படமும் வெளியாகிறதா?!”

Cinema News

“சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?! அதே நாளில் இந்த நடிகரின் படமும் வெளியாகிறதா?!”

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2 ’மற்றும் சூர்யா நடித்த ’கங்குவா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தியன் டு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் அடுத்த பாகமான ’இந்தியன் 3’ படமும் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தின விடுமுறை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் ஆகிய இரண்டு விடுமுறைகளும் ஒரே வாரத்தில் வருவதை அடுத்து அந்த நீண்ட விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ’இந்தியன் 2’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதே தினத்தை தான் சூர்யாவின் ’கங்குவா’ படக்குழுவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி வியாழக்கிழமை ரம்ஜான் தினம், அதனை அடுத்து வார விடுமுறை, அதன்பின்னர் ஏப்ரல் 14 திங்கட்கிழமை தமிழ் புத்தாண்டு என நீண்ட விடுமுறை இருப்பதால் இந்த விடுமுறை தினங்களை பயன்படுத்த ’கங்குவா’ படக்குழுவினர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் விடுமுறை விடுமுறை தினங்களில் ’இந்தியன் 2’ மற்றும் ’கங்குவா’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழக அரசின் அறிக்கையால் பாதிப்புக்குள்ளாகும் மலைவாழ் மக்கள் - தினகரன் வேதனை

More in Cinema News

To Top