Connect with us

“நாளை (12/11/23) இதேநேரம் தலைவர் தரிசனம் கிடைத்துவிடும்..! வெளியாகவிருக்கும் லால் சலாம் படத்தின் Teaser!”

Cinema News

“நாளை (12/11/23) இதேநேரம் தலைவர் தரிசனம் கிடைத்துவிடும்..! வெளியாகவிருக்கும் லால் சலாம் படத்தின் Teaser!”

லால் சலாம் படத்தின் டீஸர் தீபாவளியன்று, அதாவது நவம்பர் 12ஆம் தேதி காலை வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து வருகிறார். முன்னதாக இவர் தனது மாஜி கணவர் தனுஷை வைத்து 3, கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். தவிர, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசைதான் ஆகியப் பாடலையும், அப்படத்தில் ரீமாசென்னுக்கு டப்பிங் வாய்ஸும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் ஏதாவது சாதித்துவிட வேண்டும் என நினைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது திருமணப் பந்தத்தில் இருந்து முறிந்து வெளியே வந்தபின், பயணி என்னும் மியூசிக்கல் வீடியோவை இயக்கினார். பின், கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ’லால் சலாம்’ என்னும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்குண்டான படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை, மும்பை ஆகியப் பல இடங்களில் நடைபெற்று முடிந்து,போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிகழ்ந்துள்ளன.

இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலை ஒட்டி, வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவருகிறது. இந்நிலையில் லால் சலாம் படத்துக்குண்டான இசை வெளியீட்டு விழா டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் காட்சிகள் தீபாவளி தினமான நாளை காலை 10:45 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இந்த டீஸர் ஒரு நிமிடம் 34 விநாடிகள் ஓடும் வகையில் கட் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆவதால் இந்த டீஸரை பலரும் பார்ப்பர் என படக்குழு நம்புகிறது. ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனவும், விஷ்ணு விஷால் இப்படத்தில் ரஜினியின் தங்கை மகனாக நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல் முறை தனது முதல் காதல் குறித்து மனம்திறந்த நடிகை லாஸ்லியா..!!

More in Cinema News

To Top