Connect with us

4 நாட்களில் குபேரா படம் வசூல் எவ்வளவு தெரியுமா?

Featured

4 நாட்களில் குபேரா படம் வசூல் எவ்வளவு தெரியுமா?

கடந்த வாரம் வெளியாகிய திரைப்படங்களில் குபேரா முக்கியமான ஒன்று ஆகும். இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இருப்பினும், தெலுங்கு மொழியில் இப்படம் அமோக வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டாக திகழ்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழு இணைந்து கொண்டாடியுள்ளது. உலகளவில் கடந்த நான்கு நாட்களில் குபேரா திரைப்படம் ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளதே குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் D55-ல் இணைந்த மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி… ரசிகர்களிடையே உச்ச எதிர்பார்ப்பு! 🎬🔥

More in Featured

To Top