Connect with us

KPY தீனா மனைவி கர்ப்பம்: அழகிய போட்டோவுடன் மகிழ்ச்சி பகிர்வு.. குவியும் வாழ்த்து..

Featured

KPY தீனா மனைவி கர்ப்பம்: அழகிய போட்டோவுடன் மகிழ்ச்சி பகிர்வு.. குவியும் வாழ்த்து..

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியினால் பிரபலமானவர் கேபிவை தீனா. சின்னத்திரையில் தனது ரைமிங் மற்றும் டைமிங் காமெடிகள் மூலம் தனக்கென ஒரு வித்தியாசமான ரசிகர் வட்டாரத்தை பெற்றவர் தீனா.

திரைப்பட உலகில் இவர், நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமான பி.பாண்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தியின் ‘கைதி’, விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’, மற்றும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தவர் தீனா.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீனா, கிராபிக் டிசைனர் பிரகதீஸ்வரி அவர்களை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு பல படங்களில் பிஸியாக நடித்தவர் தீனா தற்போது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். அவரது மனைவி கர்ப்பமாக உள்ளதை அழகிய போட்டோவுடன் பகிர்ந்துகொண்டு, இந்த சந்தோஷ செய்தியை தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top