Connect with us

ஹீரோ அவதாரம் எடுத்த KPY பாலா – டீசரில் ட்ரோல்களுக்கு நேரடி பதிலடி!

Featured

ஹீரோ அவதாரம் எடுத்த KPY பாலா – டீசரில் ட்ரோல்களுக்கு நேரடி பதிலடி!

காமெடி நடிகராக விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் தான் KPY பாலா. ‘கலக்கப்போவது யாரு’ தொடங்கி ‘குக் வித் கோமாளி’ வரை பல நிகழ்ச்சிகளில் அவர் தனது தனித்துவமான காமெடியால் மக்களை கிண்டல் இல்லாமல் சிரிக்க வைத்துள்ளார்.

நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சில திரைப்படங்களிலும் சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தனது சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, நிதிநிலைமையில்லாமல் இருக்கும் மக்களுக்கு உதவியும் செய்து வருகிறார். இதற்காக சமூக வலைதளங்களில் அவருக்கு பெரும் பாராட்டுகளும் கிடைத்துவருகிறது.

இந்நிலையில், தற்போது பாலா ஹீரோவாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு ‘காந்தி கண்ணாடி’ என்ற தலைப்பு இடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளன.

“டிவியில் பார்ப்பதே பெருசு. இதுல தியேட்டர்ல வந்து இந்த முகத்தை பார்க்க வேண்டுமா?” என்கிற வகையில் சிலர் விமர்சிக்க, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் டீசரில் இடம்பெற்ற வசனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பாலா ஹீரோவாக நடிக்கும் இப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலகளவில் 8 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top