Connect with us

ஈடன் கார்டனில் வாணவேடிக்கை நடத்திய கொல்கத்தா அணி – பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு..!!

Featured

ஈடன் கார்டனில் வாணவேடிக்கை நடத்திய கொல்கத்தா அணி – பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 262 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் KKR – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய இருவரும் பஞ்சாப் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.

அட்டகாசமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தி வந்த நிலையில் சால்ட் 75 ரன்னிலும் நரேன் 71 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. இதையடுத்து வந்த வந்த வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்கு ரன்களுடன் வெளியேற ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.

இறுதியில் 20 ஓவர்கள் முடியில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 261 ரன்களை குவித்தது. இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது SRH அணி

More in Featured

To Top