Connect with us

பந்துவீச்சில் பட்டயகிளப்புமா டெல்லி..? டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு..!!!

Featured

பந்துவீச்சில் பட்டயகிளப்புமா டெல்லி..? டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 1 போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியம் பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 7 ஆம் இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top