Connect with us

அட்லீ, அல்லு அர்ஜுன் படத்தின் வில்லன் யார் தெரியுமா? ஹாலிவுட் நட்சத்திரங்கள் ரேஸில்!

Featured

அட்லீ, அல்லு அர்ஜுன் படத்தின் வில்லன் யார் தெரியுமா? ஹாலிவுட் நட்சத்திரங்கள் ரேஸில்!

இந்திய சினிமாவில் வெற்றி நடைபோடும் இயக்குநர் அட்லீ, தனது ஆறாவது திரைப்படத்தை முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து இயக்கி வருகிறார். ‘ஜவான்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உருவாகும் இந்த படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இசை அமைப்பாளராக இளம் சென்சேஷனலாகக் கருதப்படும் சாய் அப்யங்கர் பணியாற்றுகிறார். இது அவரது முதல் பெரிய பாலிவுட் அனுபவமாகும். இதற்கேற்ப படத்தின் இசை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவாக சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் புதிய திரைப்படம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே தற்போது இந்திய சினிமாவில் மிக அதிக பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதே கதாபாத்திரத்திற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சனும் பரிசீலனையில் உள்ளதாக industry வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுனின் இந்த புதிய முயற்சியில் வில்லனாக யார் நடிக்கப்போகிறார் என்பது ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top