Connect with us

நடிகர் கிங்காங் மகள் திருமணத்திற்கு வடிவேலு வைத்த மொய் தொகை எவ்வளவு தெரியுமா?

Featured

நடிகர் கிங்காங் மகள் திருமணத்திற்கு வடிவேலு வைத்த மொய் தொகை எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரைப்பட உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் கிங்காங், தனது மகள் கீர்த்தனாவின் திருமணத்தை சமீபத்தில் வெகு விமரிசையாக நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரை உலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்று மணமக்களுக்குத் தனது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அத்துடன், கிங்காங் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் தமிழ் ரசிகர்களிடையே இன்றும் சிரிப்புகளைத் தூண்டும் வகையில் பிரபலமானவை. ஆனால், திருமண விழாவில் நடிகர் வடிவேலு பங்கேற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதுகுறித்து நடிகர் கிங்காங் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, நடிகர் வடிவேலு தற்போது தனது சொந்த ஊரிலிருக்கிறார். அங்கு ஒரு படத்தின் தொடர்பான முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதால்தான் திருமணத்தில் பங்கேற்க முடியாமல் போனதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், மணமக்களை மனதார வாழ்த்திய அவர், ரூ.1 லட்சம் மொய்யாக வழங்கியதாகவும் கிங்காங் அப்போது தெரிவித்துள்ளார். மேலும், திருமணம், தனது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் திரையுலக அனுபவங்களைப் பற்றியும் இந்த பேட்டியில் கிங்காங் பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top