Connect with us

இந்த ஜோடி சூப்பர் கூட்டணி! கவின், பிரியங்கா மோகன் புதிய படத்தில் இணைகிறார்கள்..

Featured

இந்த ஜோடி சூப்பர் கூட்டணி! கவின், பிரியங்கா மோகன் புதிய படத்தில் இணைகிறார்கள்..

தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பிரியங்கா மோகன். இதைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது அறிமுகத்தை செய்துகொண்டார்.

அதன்பின், ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டான்’, ‘கேப்டன் மில்லர்’, ‘பிரதர்’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது, நடிகர் கவினுடன் முதல் முறையாக இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் பிரியங்கா மோகன்.

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தில் ஹீரோவாக கவின் மற்றும் ஹீரோயினாக பிரியங்கா மோகன் உறுதி செய்யப்பட்டுள்ளனர். ‘கனா காணும் காலங்கள்’, ‘கட்சி சேர’ பாடல் உள்ளிட்டவற்றை இயக்கிய இயக்குநர் கென் ராய்சன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூஜை விழாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top