Connect with us

மாற்றி மாற்றி பேசி மாட்டிகொண்ட கயாடு லோஹர்! வைரலாகும் Video..

Featured

மாற்றி மாற்றி பேசி மாட்டிகொண்ட கயாடு லோஹர்! வைரலாகும் Video..

இன்றைய தேதியில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் கயாடு லோஹர். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், சமீபத்தில் வெளிவந்த “டிராகன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று தந்துள்ளது. அடுத்ததாக, அதர்வாவுடன் “இதயம் முரளி” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட நடிகை கயாடு லோஹர், “உங்களுடைய Celebrity Crush யார்?” என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த கயாடு லோஹர், “தளபதி விஜய் தான் என்னுடைய Celebrity Crush” என கூறினார். மேலும், “விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘தெறி’ தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் உரையாடலில், “உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?” என்று ஒரு ரசிகர் கேட்டபோது, “தனுஷ் தான் எனக்கு பிடிக்கும், வேறு யாருக்கும் இடமில்லை” என கூறியுள்ளார். இதன் பிறகு, நெட்டிசன்கள் கயாடு லோஹர் பலவிதமாக பேசுவதாகவும், அவள் மாட்டிக்கொண்டதாகவும் விமர்சிக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top