Connect with us

மனைவியை இழந்து தள்ளாடிய கவுண்டமணி.. ஆரத்தழுவி ஆறுதல் கூறிய விஜய்..

Featured

மனைவியை இழந்து தள்ளாடிய கவுண்டமணி.. ஆரத்தழுவி ஆறுதல் கூறிய விஜய்..

85 வயதான தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணிக்கு சோகச் செய்தி. அவருடைய மனைவி சாந்தி அம்மாள், நேற்று காலை 10.30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இறுதிக் கவணிப்புக்கு திரையுலகத்தையும், அரசியல்துறையையும் சேர்ந்த பலர் நேரில் வந்தனர். நடிகர் செந்தில், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முக்கியமாக, நடிகர் விஜய், கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்தவுடன் நேராக சென்று கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார். மனைவியை இழந்த துக்கத்தில் உடைந்திருந்த கவுண்டமணியை விஜய் ஆரத்தழுவி, “அண்ணா, உங்களுக்காக நான் இருக்கேன்” என்று உற்சாகம் அளித்தார்.

மேலும், கவுண்டமணியின் இரு மகள்களிடமும் பேசிச், “அப்பாவை பத்திரமா பார்த்துக்கோங்கம்மா” எனச் சொல்லிவிட்டுச் சென்றார். தமிழ் சினிமாவில் நாகேஷுக்குப் பிறகு, நகைச்சுவையை வாழ்வாக மாற்றியவர் கவுண்டமணி. மூப்பினால் நடிப்பில் இருந்து விலகியிருந்தாலும், ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்தவர். சாந்தி அம்மாவின் மறைவு, தமிழ் திரைத்துறைக்கும் கவுண்டமணிக்கும் ஒரு பெரிய இழப்பு.அவருடைய குடும்பத்துக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top