Connect with us

மந்தம் காட்டும் கவினின் பிலடி பெக்கர் – தயாரிப்பாளர் நெல்சன் எடுத்த அதிரடி முடிவு..!!

Cinema News

மந்தம் காட்டும் கவினின் பிலடி பெக்கர் – தயாரிப்பாளர் நெல்சன் எடுத்த அதிரடி முடிவு..!!

தீபாவளி ரேஸில் பங்கேற்று கெத்து காட்டும் என நினைத்த கவினின் பிலடி பெக்கர் திரைப்படம் சற்று மந்தம் காட்டி வரும் நிலையில் தற்போது அப்படத்தின் தயாரிப்பாளரான நெல்சன் எடுத்துள்ள முடிவு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஸ்டார் நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படமே ‘Bloody Beggar’ .

சிவபாலன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் கவினுடன் சேர்ந்து ஏரளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நெல்சன் தயாரிப்பில் முதல் முறையாக உருவான இப்படத்தின் மீது ஏகபோக எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்த நிலையில் வசூலும் பெரிய அளவில் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிலடி பெக்கர் படத்தின் தமிழக உரிமையை வாங்கி விநியோகித்த பைவ் ஸ்டார் நிறுவனத் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு சுமார் ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த நஷ்டத்தில் இருந்து ரூ. 5 கோடியை நெல்சன் திரும்பி கொடுப்பதாக உறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top