Connect with us

விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா விவகாரம் – இதைவிட சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்? கருணாஸ் காட்டம்..!!

Featured

விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா விவகாரம் – இதைவிட சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்? கருணாஸ் காட்டம்..!!

அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் ஒட்டுமொத்த வியாபாரிகளையே நிதியமைச்சர் அவமானப்படுத்தியுள்ளார் , இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்? என நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் கூறியதாவது :

ஒரு நடிகராக நான் சம்பாதிக்கும் 18% பணத்தை ஜிஎஸ்டிக்காக கட்டுகிறேன். நான் வறுமையில்தான் இருக்கேன். ஆனாலும் நான் அரசாங்கத்தை மதித்து வரியை கட்டுகிறேன், ஏனெனில் அந்த பணத்தை அரசு மக்களின் நலனுக்காக செயல்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான்.

மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும்..? இப்படி இருக்க கோவையில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் மத்திய நிதியமைச்சர், இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்? என கருணாஸ் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top