Connect with us

மீண்டும் பாண்டிராஜுடன் இணையும் கார்த்தி! தயாரிப்பில் சூர்யா?

Cinema News

மீண்டும் பாண்டிராஜுடன் இணையும் கார்த்தி! தயாரிப்பில் சூர்யா?

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். குறிப்பாக பருத்திவீரன் படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் பெரிய வரவேற்பை பெற்றார்.

அதன்பிறகு ஆக்ஷன், குடும்பம், உணர்ச்சி, சமூக கருத்து போன்ற பல்வேறு கதைகளில் நடித்துக் கொண்டு தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். ஒரே மாதிரியான படங்களை மட்டும் தேர்வு செய்யாமல், ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை செய்து வருவது அவரது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு கார்த்தி நடித்த வா வாத்தியார் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து சர்தார் 2, மார்ஷல், கைதி 2 போன்ற பெரிய படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், கார்த்தி மீண்டும் ஒரு வெற்றி இயக்குனருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இயக்குனர் வேறு யாருமில்லை, இயக்குனர் பாண்டிராஜ் தான் என கூறப்படுகிறது. இந்த புதிய படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க உள்ளதாகவும், தற்போது கதை விவாத பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டணி மீண்டும் உருவாகும் செய்தி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top