Connect with us

கார்த்தி 29 படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ – விருந்தினராக வரும் தெலுங்கு ஹீரோ!

Featured

கார்த்தி 29 படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ – விருந்தினராக வரும் தெலுங்கு ஹீரோ!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக விளங்கி வரும் கார்த்தி, ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளிவந்து, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ மற்றும் ‘வா வாத்தியாரே’ ஆகிய திரைப்படங்கள் வெளியிடத் தயாராக உள்ளன. இந்நிலையில், தனது 29வது திரைப்படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘டாணாக்காரன்’ திரைப்படத்தை இயக்கிய தமிழ் இயக்கவுள்ளார்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில், கார்த்தியுடன் நடிகர் ஜெயராம் மற்றும் மலையாள நடிகர் நிவின் பாலியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும், பிரபல தெலுங்கு நடிகரான நானி, இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் தோன்றுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலால் ரசிகர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜன நாயகன் சென்சார் விவகாரம்: பவன் கல்யாண் கருத்து வைரல்

More in Featured

To Top