Connect with us

“காந்தாரா: Chapter 1 படத்தின் பூஜை வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது!”

Cinema News

“காந்தாரா: Chapter 1 படத்தின் பூஜை வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது!”

ரிஷப் ஷெட்டி நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.300 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி, நாயகனாகவும் நடிக்கிறார். டீசரில் கையில் திரிசூலத்துடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் தோன்றுகிறார் ரிஷப் ஷெட்டி.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. தற்போது வரை பிரஸ்ட் லுக் டீஸர் நேற்று வெளியாகி, இன்னுமும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் முகூர்த்தம் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top