Connect with us

பிரபல தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

Music_Director_Vijay_Anand

Cinema News

பிரபல தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

தென்னிந்திய திரைப்படங்களில் 100 படங்களுக்கு மேல் இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

1980 காலகட்டத்தில் இசையமைப்பாளராக கேரியரை தொடங்கிய விஜய் ஆனந்த் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு இசையமைத்துள்ளார். எனினும், இளையராஜாவின் ஆதிக்கத்தால் தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால், பின்னர் கன்னட திரையுலகில் செட்டில் ஆகிவிட்டார்.

தமிழ் சினிமாவுக்கு இளையாராஜா போல் கன்னட சினிமா உலகில் கொடிகட்டிப்பறந்த விஜய் ஆனந்த் அங்கு பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், 71 வயதான விஜய் ஆனந்த் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். இதையடுத்து பெருங்களத்தூரில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரது மரணம் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பல மொழி படங்களில் பட்டயகிளப்பும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா..?
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top