Connect with us

பாட்ஷா பாய் vs மொய்தீன் பாய்.. சான்ஸே இல்ல.. லால் சலாமில் இப்படியொரு கனெக்ஷனா?

Lal_Salaam_Baasha

Cinema News

பாட்ஷா பாய் vs மொய்தீன் பாய்.. சான்ஸே இல்ல.. லால் சலாமில் இப்படியொரு கனெக்ஷனா?

பாட்ஷா படத்தில் மாணிக்கம் “ரஜினி” பாட்ஷா பாயாக மாறும் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்த சரண் ராஜ், லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார்.

ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு, ஞானவேலின் இயக்கத்தில் தயாராகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு மத்தியில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படம் 1990களில் கிரிக்கெட்டை மையமாக வைத்து நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டாலும், படத்தில் இந்து-முஸ்லீம் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

மேலும், இதில் வன்முறையை விட்டு அன்பை போதிக்க வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தும் மொய்தீன் பாய் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்நிலையில், படத்தில் நடிகர் சரண் ராஜ் ரஜினியின் நண்பராக நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பிளாக்பஸ்டர் படமான பாட்ஷாவிலும் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தனர். அதில், அன்வர் பாட்ஷாவாக நடித்த சரண் ராஜின் மரணம்தான் மாணிக்கம் ரஜினியை பாடஷா பாயாக மாற்றும். இந்நிலையில், இருவரும் மீண்டும் நண்பர்களாக இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, லால் சலாம் படத்தின் தெலுங்கு டப்பிங்கில் ரஜினிகாந்திற்கு வில்லன் நடிகர் சாய் குமார் குரல் கொடுத்துள்ளார். பாட்ஷா படத்தின் தெலுங்கு டப்பிங்கிலும், சாய் குமார் தான் குரல் கொடுத்தார் என்பது பாட்ஷா – லால் சலாம் தொடர்பை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை கீர்த்தி சுரேஷ் Cute போட்டோஷூட் Viral..

More in Cinema News

To Top