Connect with us

தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கனிமொழி எம்.பி

Featured

தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கனிமொழி எம்.பி

தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கி இருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ‘தேர்தல் பத்திரம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிராக [பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது .

இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதன்படி அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என கூறி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு பலரும் வரவேற்பு அளித்து வரும் நிலையில் தற்போது இத்தீர்ப்பு குறித்து திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பு வெளிப்படையான , ஜனநாயக வழியிலான தேர்தல் நடைமுறைகளின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என கனிமொழி தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் சீறிப்பாய்ந்த டெல்லி அணி - லக்னோவுக்கு 209 ரன்கள் இலக்கு..!!

More in Featured

To Top