Connect with us

கரகாட்டக்காரன் நடிகை கனகவா இது..பல வருடங்கள் கழித்து முகத்தை காட்டிய நடிகை கனகா!

Cinema News

கரகாட்டக்காரன் நடிகை கனகவா இது..பல வருடங்கள் கழித்து முகத்தை காட்டிய நடிகை கனகா!

பழம்பெரும் நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரு மகளான கனகா பாடகியாக வேண்டும் என்கிற கனவுடன் திரையுலகில் நுழைய நினைத்தார் ஆனால் அவரை நடிகையாக மாற்றியது இந்த திரையுலகம்…

1989 ஆம் ஆண்டு கங்கையமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் கனகாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது…இவருக்கு மிக பெரிய ஒரு இடத்தை இது ஏற்படுத்தி கொடுத்தது என்றும் சொல்லலாம்…

இதுவரை தமிழில் சுமார் 40க்கும் மேற்பட்ட பாடங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் குறிப்பாக மலையாளத்தில் மிகவும் பெரிய ஹிட் பெற்ற God Father படத்தில் கனகா நடித்திருந்தார்…அதில் சிறந்த இடத்தை அவர் பிடித்து அங்கும் சூப்பராக வளம் வந்தார்…

தமிழில் நடிகை கனகா நடிப்பில் கடைசியாக 1999 ஆம் ஆண்டு விரலுக்கு ஏத்த வீக்கம் படம் வெளியானது…அதுவே அவருக்கு தமிழில் வந்த கடைசி படம்,இந்த படத்தில் நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதே போல் மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஈ மழா தேன் மழா என்கிற படத்தில் நடித்திருந்தார்….அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்…அவரை யார் அழைத்தாலும் பேசவில்லை அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார் அவர்…

இந்நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் நடிகை கனகாவை பிரபல நடிகை குட்டி பத்மினி அவருடைய வீட்டிற்க்கே சென்று சந்தித்துள்ளார்…யாரையும் பார்க்காத அவர் இன்று அவரை பார்த்து இருப்பது வைரலாக பேசப்பட்டு வருகின்றது…அப்போது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மிகவும் மாறி இருக்கின்றார் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபல இளம் இசையமைப்பாளர் சென்னையில் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

More in Cinema News

To Top