Connect with us

இசையமைப்பாளராக ஆகாதது ஏன்? கமல்ஹாசனிடம் நேரடி கேள்வி – ஏ.ஆர். ரஹ்மான் முடிச்சுவிட்டாரு!

Featured

இசையமைப்பாளராக ஆகாதது ஏன்? கமல்ஹாசனிடம் நேரடி கேள்வி – ஏ.ஆர். ரஹ்மான் முடிச்சுவிட்டாரு!

க் லைஃப் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முந்தைய விக்ரம் படத்துக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகி முழுமையாக புரமோஷனில் ஈடுபட்டது போல, இந்த முறையும் தக் லைஃப்பிற்காக அதே அளவுக்கு தீவிரமாக உள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது இந்தியன் 3 படம் வெளியாகுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. படம் வெளியானாலும், மீண்டும் ரசிகர்கள் ட்ரோல் செய்யும் நிலை உருவாகினால், அந்த செலவும் உழைப்பும் வீணாகிவிடும் என்றே சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தக் லைஃப் படத்தை கமல்ஹாசன் மிகுந்த நம்பிக்கையுடன் வேற லெவலில் புரமோட் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில், விமர்சகர் பரத்வாஜ் ரங்கன், “சகல கலா வல்லவன்” என அழைக்கப்படும் கமல்ஹாசன் இசையமைப்பாளராக மட்டும் ஏன் வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் பதில் அளித்தனர். கமல்ஹாசன் கூறுகையில், “எழுத்தாளனாக, உதவி இயக்குநராக, பின்னர் இயக்குநராக ஆக வேண்டும் என நினைத்தேன். ஆனால் இயக்குநர் கே.பாலசந்தர், ‘நீ நடிகனாகிவிடு, பிறகு என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம்’ என்றார். அப்படித்தான் நடிகனாக மாறினேன். இசை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அது எனக்கு வர மாட்டேன் என்கிறது. ரஹ்மான், இளையராஜா போன்றவர்கள் இசையை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை பார்த்தேன்.

ஆனாலும், அதன் ஆழத்தை உணர்ந்து விட்டேன். இது நமக்கில்லைடா சாமி என விட்டுவிட்டேன்,” என்றார். மேலும், “இளையராஜாவும், ரஹ்மானும் இசை கற்றுத் தரச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஒருமுறை ரஹ்மானிடம் கேட்டபோது, ‘பிராக்டீஸ்’ என்ற ஒரே வாரத்தில் சொல்லி கலாய்ச்சிட்டார்,” எனவும் தெரிவித்தார் கமல்ஹாசன். அதற்கு ஏ.ஆர். ரஹ்மான், “அந்த ஒரு விஷயத்தையாவது எங்களுக்கு விட்டு வையுங்க,” என நையாண்டியாக பதிலளித்தார்.

மேலும், “கமல் சார் வீட்டில் பியானோ எல்லாம் இருக்கிறது. இசையமைப்பாளராக ஆகிவிட்டாலும் ஆச்சரியமில்லை,” என்றார். தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா, மே 24ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான் நேரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். ஜூன் 5ம் தேதி, உலகம் முழுவதும் தக் லைஃப் படம் வெளியாகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top