Connect with us

ரூ.4.5 கோடி கொடுத்தார்களா விஜய்யின் ஜனநாயகன் படக்குழு? வெளியான தகவல்!

Featured

ரூ.4.5 கோடி கொடுத்தார்களா விஜய்யின் ஜனநாயகன் படக்குழு? வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நடிகர் விஜய், ‘ஜனநாயகன்’ படத்துடன் தனது நடிப்பை நிறுத்த இருக்கிறார். ரூ.300 கோடி சம்பளம் பெற்ற நாயகனாக இருக்கும் விஜய், தற்போது எச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்தப் படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படம் ஒரு தெலுங்கு ஹிட்டான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. முக்கியமாக, அந்த படம் அடிப்படையில் ஒரு சமூக பிரச்சனையான ‘குட் டச் – பேட் டச்’ காட்சியை கொண்டது.

இந்தக் காட்சியைத் தமிழ் படத்தில் தவறாமல் சேர்க்க வேண்டும் என்பதற்காக, ‘ஜனநாயகன்’ படக்குழு அந்த ரீமேக் உரிமையை முழுமையாக வாங்கியுள்ளனர். இதற்காக சுமார் ரூ.4.5 கோடி செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அகில் திருமண வரவேற்பில் மகேஷ் பாபு அணிந்த டி-ஷர்ட் விலை இத்தனை லட்சமா?

More in Featured

To Top