Connect with us

செர்பியா நாட்டில் சத்தமின்றி நடைபெறும் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு

Cinema News

செர்பியா நாட்டில் சத்தமின்றி நடைபெறும் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது செர்பியா நாட்டில் சத்தமின்றி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல மெகா கூட்டணியில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் . அதன்படி பாதியிலேயே ட்ராப் ஆன இந்தியன் 2 தற்போது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. அதேபோல் பிரபாஸின் கல்கி படத்திலும் கமல் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் தனது 234வது படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் உடன் இணைந்துள்ளார்.

ணிரத்னம் உடன் இணைந்து தக் லைஃப் என்ற படத்தில் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார். மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் இப்படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் ரசிகர்களும் அப்டேட் கேட்டு அன்பு தொல்லை செய்து வருகின்றனர் .இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது .

அதன்படி இயக்குநர் மணிரத்னம், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் சிவா ஆகியோர் செர்பியா சென்றுள்ளனர். அங்கு ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற உள்ளதாகவும் . அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் அங்கிருந்து செர்பியா சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு அணியிடம் ஆல் அவுட்டான குஜராத் - RCB அணிக்கு 148 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top