Connect with us

தீவிர கட்டுமானத்தில் நடிகர் சங்க கட்டிடம் – நடிகர் கமல்ஹாசன் செய்த மாபெரும் உதவி..!!

Cinema News

தீவிர கட்டுமானத்தில் நடிகர் சங்க கட்டிடம் – நடிகர் கமல்ஹாசன் செய்த மாபெரும் உதவி..!!

தமிழ்நாட்டின் திரை நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளை எடுக்கப்பட்டு வரும் நிலையில் நிதி நெருக்கடி காரணமாக இந்த கட்டிடத்தின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் நடிகர் சங்கத்திலும் பல இடையூறுகள் வர அது நீதி மன்றம் வரை சென்றது. இதையடுத்து ஒருவழியாக அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு தற்போது பலபடி மீண்டும் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கதின் கட்டுமான பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவி செய்தார் .

அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்த நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகிய நடிகர் சங்க நிர்வாகிகள் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை பெற்றுக் கொண்டனர் .

இந்நிலையில் அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி செய்துள்ளார் .

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் இன்று கமல்ஹாசனை சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை பெற்றுக் கொண்டனர்.

நடிகர் சங்க கட்டடம் தற்போது தீவிர கட்டுமானப்பணியில் இருக்கும் நிலையில் உச்ச நட்சத்திரங்கள் பலரும் நிதி உதவி செய்தால் இந்த கட்டடத்தை இன்னும் விரைவாக செய்து முடிக்கலாம் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பகத் பாசிலின் 'ஆவேசம்' திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top